மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! தங்கம் விலை சரிவு கடைகளில் அலைமோதும் கூட்டம்!

Photo of author

By Parthipan K

மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! தங்கம் விலை சரிவு கடைகளில் அலைமோதும் கூட்டம்!

தங்கம் விலை அதிகரிப்பதற்கு காரணம் மக்கள் தான். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டு என எண்ணி தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதனை தொடரந்து கடந்த 2022 முதல் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.

அதனால் தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் கடந்த மாதங்களில் இருந்து பண்டிகை தினங்களாக வருவதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தது. மேலும் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தங்கத்தின் விலை வராலாறு காணாத வகையில் உச்சம் பெற்று ஒரு பவுன் 44,040 க்கு விற்பனையானது.

இந்நிலையில் நேற்று ஒரு சவரன் ரூ 42,520 க்கு விற்பனையானது. ஆனால் இன்று பவுனுக்கு ரூ 280 குறைந்து சவரன் ஒன்று 42,240க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ 5315 க்கு விற்பனையானது. ஆனால் இன்று கிராமுக்கு ரூ 35 குறைந்து 5,280 க்கு விற்பனையாகின்றது.

அதுமட்டுமின்றி இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ 72 க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ 71.80 க்கு விற்கப்படுகிறது. மேலும்  1 கிலோ பார் வெள்ளி ரூ 71,800 க்கு விற்பனையாகின்றது.