விமான பயணிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பயணவகுப்பு மாற்றம் செய்யபட்டால் அடுத்த முறை இலவசமாக பயணிக்கலாம்!

0
166
Happy news for air travelers! If you change your travel class, you can travel for free next time!
Happy news for air travelers! If you change your travel class, you can travel for free next time!

விமான பயணிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பயணவகுப்பு மாற்றம் செய்யபட்டால் அடுத்த முறை இலவசமாக பயணிக்கலாம்!

விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை பிரிவான டிஜிசிஏ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்களுக்கு  டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதியை திரும்ப வழங்கப்படும்.சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்கள் செலுத்திய டிக்கெட் கட்டணத்தில் வரிகள் உள்பட 30 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையில் விமான நிறுவனங்கள் திருப்பி அளிக்க வேண்டும்.

இந்த விதிமுறை பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. மேலும் 1500 கிமீ குறைவான தொலைவு விமான பயண டிக்கெட்டில் 30 சதவீதமும்,1500 முதல் 3500 கிமீ தொலைவு பயண டிக்கெட்டுகள் 50 சதவீதமும்,3500 கி மீ க்கும் மேல் உள்ள பயண டிக்கெட்டுகளுக்கு 75 சதவீதமும் பயணக் கட்டணம் திரும்ப வழங்கப்படும்.

பயணிகளுக்கு தெரியாமல் பயண வகுப்பு மாற்றம் செய்யப்பட்டால் வரிகள் உள்பட பயணக் கட்டணத்தை முழுமையாக திருப்பி வழங்கபடுவதுடன் அடுத்த வகுப்பில் பயணிகளை இலவசமாக அழைத்து செல்ல வேண்டும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

Previous articleபொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  கவனத்திற்கு! 
Next articleமுதன் முதலில் திருமுறை,  திருப்புகழ்! அரோகரா ஆனந்த கோஷத்துடன் அரங்கேறிய பழனி முருகன் குடமுழுக்கு விழா!