ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!!

0
146
#image_title

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்கு ஏற்ப திருப்பூர், சேலம், ஈரோடு வழியாக கோட்டயம் முதல் விஜயவாடா வரையில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சபரிமலை சீசன் துவங்கியுள்ள இருந்து ஐயப்ப பக்தர்கள்அனைவரும் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு சென்று வருகின்றனர். ஒவ்வொரும் தங்களின் வசதிக்கு ஏற்ப கார், வேன், பேருந்து, இரயில் என்று தங்களுக்கு தகுந்த வாகனங்களின் மூலமாக சபரிமலைக்கு செல்கின்றனர்.

அரசும் பக்தர்கள் சிரமம் இன்றி சபரிமலை பயணம் செய்வதற்கு பல வசதிகளை செய்து வரும் நிலையில் இரயில்வே நிர்வாகம் விஜயவாடா முதல் கூட்டம் வரை ஐயப்ப பக்தர்கள் சிரமம் இன்றி பயணம் செய்யும் வகையில் சிறப்பு இரயில் அறிவித்துள்ளது.

அதன்படி விஜயவாடாவில் இருந்து புறப்பட்டு செல்லும் 07137 என்ற எண் கொண்ட சிறப்பு இரயில் டிசம்பர் 1, 8, 29 ஆகிய தேதிகளிலும் ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். இந்த சிறப்பு இரயில் மேற்குறிப்பிட தேதிகளில் வெள்ளிக் கிழமைகளில் விஜயவாடாவில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.00 மணிக்கு கோட்டயத்தை சென்று அடையும்.

அதே போல கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் 07138 என்ற எண் கொண்ட சிறப்பு இரயில் டிசம்பர் 3, 10, 31 மற்றும் ஜனவரி 14, 21 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த சிறப்பு இரயில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் கோட்டயத்தில் மதியம் 1 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு இரயில் மறுநாள் மதியம் 2 மணிக்கு விஜயவாடா சென்று அடையும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

விஜயவாடாவில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு இரயில் சிறப்பு இரயில் புதிய குண்டூர், தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், சிங்கராயகொண்டா, காவாலி, நெல்லூர், கூடூர், ரேனிகுண்டா. காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன் ஆகிய இடங்களில் நின்று பின்னர் கோட்டயம் சென்று அடையும்.

விஜயவாடாவில் இருந்து புறப்படும் சிறப்பு(07137) இரயில் சனிக்கிழமைகளில் சேலத்திற்கு 12.22 மணிக்கு வந்து 12.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதே போல ஈரோடுக்கு இரவு 1.20 மணிக்கு வந்து 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதே போல திருப்பூருக்கு 2.13 மணிக்கு வந்து 2.15 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

மேலும் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் கோட்டயம் முதல் விஜயவாடா வரையிலான சிறப்பு இரயில்(07138) ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பூருக்கு 7.15 மணிக்கு வரும் சிறப்பு இரயில்(07138) 7.17 மணிக்கு செல்லும். ஈரோட்டுக்கு 8.30 மணிக்கு வந்தடைந்து பின்னர் 8.40 மணிக்கு ஈரோட்டில் இருந்து இந்த இரயில் புறப்பட்டு செல்லும். அதே போல சேலத்திற்கு 9.40 மணிக்கு வரும் சிறப்பு இரயில் 9.42 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

Previous articleபிரதமரின் ரோஜ்கார் மேளா திட்டம்! 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை!!
Next articleதமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் பருவமழை ..!!