ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! சபரிமலைக்கு செல்ல சிறப்பு பேருந்து!!

Photo of author

By Jeevitha

சபரி மலை ஐய்யப்பன் கோவில் இந்த வருடத்திற்கான மண்டல பூஜை தொடங்கவுள்ள நிலையில், தேவஸ்தானம் மாலை 5 மணிக்கு திறக்க உள்ளது. அந்த நிலையில் இன்று முதல் சபரி மலைக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழக அரசு  அறிவித்துள்ளது.

ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தயாராகி வருகின்றனர். மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். அந்த நிலையில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வர கோவில் நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சபரி மலை பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் தினமும் 70,000 பேரும், உடனடி தரிசனத்திற்கு 10,000 பேரும் அனுமதிக்கப்படவுள்ளது.

தரிசனத்திற்கு செல்லும் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 16-ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக சிறப்பு பேருந்துகளை பதிவு செய்ய வேண்டும் என்றல் 60 நாட்களுக்கு முன்பே www.tnstc.in மற்றும் TNSTC OFFICIAL APP போன்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

அது மட்டும் அல்லாமல் பேருந்து பற்றிய முழு விவரங்களுக்கு 9445014426, 9445014421 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் இந்த ஆண்டு மட்டும் அல்லாமல் ஆண்டுதோறும் நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து பக்தர்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பேருந்துகளின் மூலம்  பக்தர்கள் பயனடைகிறார்கள் என கூறப்படுகிறது.