தலைநகர் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.576க்கு பைப் லைன் கேஸ் கனக்ஷென்!!
சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பைப் லைன் கேஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.LPG சிலிண்டரின் விலையை விட பைப் லைன் இயற்கை எரிவாயு விலை 30% குறைவு என்ற காரணத்தினால் சென்னை வாசிகள் பைப் லைன் கேஸ் இணைப்பு பெற பதிவு செய்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் சுற்றுசூழல் மாசடைவது தடுக்கப்படும்.அது மட்டுமின்றி இறக்குமதி செலவு குறைவு என்பதால் இந்த பைப் வழியாக இயற்கை எரிவாயு பயன்பாட்டை மக்களிடத்தில் அதிகரிக்க மத்திய அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில்,எண்ணுரில் எல்என்ஜி திரவ நிலை எரிவாயு முனையத்தை அமைத்து வெளிநாடுகளில் இருந்து கடல் வழி போக்குவரத்து மூலம் திரவ எரிவாயுவை இறக்குமதி செய்து குழாய் வழியாக எரிவாயு விநியோகம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.
வீட்டிற்கு வீடு தண்ணீர்,மின்சார கனக்ஷென் வழங்கி வருவதை போல் இனி எரிவாயுவையும் குழாய் வழியாக வழங்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்த பைப் லைன் கேஸ் இணைப்பில் பொருத்தப்பட்டிருக்கும் மீட்டரை வைத்து தாங்கள் எவ்வளவு கேஸ் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை எளிதில் கண்டறிய முடியும்.இதனால் எரிவாயுவை குறைவாக பயன்படுத்த முடியும்.இதனால் அதிக செலவு தவிர்க்கப்படும்.இது போன்று பல அம்சங்கள் இருப்பதால் பைப் லைன் கேஸ் இணைப்பை பெற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.