மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி உயர்வு உண்டு!

0
225
Happy news for central government employees! What is the percent increase in salary this month?
Happy news for central government employees! What is the percent increase in salary this month?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி உயர்வு உண்டு!

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு  அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கம் உயர்ந்து வருகின்றது.அதன் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறை அவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகின்றது.மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது.அந்த அடிப்படையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படும்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படவுள்ளது.மேலும் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது.அதனால் அதற்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரும் ஜனவரி 31 ஆம் தேதி மத்திய தொழிலாளர் அமைச்சகமானது அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்னை வெளியிடவுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் 132.5 ஆக உள்ள நிலையில் இம்மாதமும் ஒரே அளவில் குறியீட்டு எண் நீடித்தால் 3 சதவீதம் அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது.அதன் அடிப்படையில் தற்போது 38 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 41 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளது.

மேலும் 41 சதவீதமாக உயர்த்தப்பட்டால் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் வழங்கும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 10,800 ரூபாய் சம்பளம் உயர்வு ஏற்படும்.அதுமட்டுமின்றி அதிகபட்ச சம்பளம் 56,900 ரூபாய் வாங்கும் அரசு ஊழியருக்கு 20,000 ரூபாய் வரை சம்பளம் உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleமாநகர போக்குவரத்து கழகம் வழங்கிய கூடுதல் சலுகை! மாதாந்திர பயண அட்டை விற்பனை காலம் நீட்டிப்பு!
Next articleபாலியல் தொல்லை விவகாரத்தில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர்! மாடல் அழகியின் வாக்கு மூலத்தில் வெளிவந்த அதிருப்தி தகவல்!