குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகம் முழுவதும் 1 வருடத்திற்கு இலவச ரேஷன்!!
கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் மக்கள் வேலை வாய்ப்பு இன்றி இருந்தனர். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியம் மற்றும் உணவுக்கான பொருள்கள் வழங்கியும் உதவியது.
அந்த வகையில் மத்திய அரசு ஆனது ஏழை குடும்ப மக்களுக்கு உதவி புரியும் வகையில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை அமல் படுத்தியதன் மூலம் ஏழை எளிய குடும்பங்களுக்கு தானியம் அல்லது அரிசி ஐந்து கிலோ என்ற வகையில் வழங்கப்பட்டு வந்தது.
இத்திட்டம் மூன்று மாதங்கள் செயல்பட்டு வந்த நிலையில் அதனை டிசம்பர் மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.
மீண்டும் இத்திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற பொழுது இதற்கான நீட்டிப்பு தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமானது இம்மாதம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
எனவே ஏழை எளிய குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்து கிலோ அரிசி அல்லது அதற்கு ஏற்றவாறு தானியம் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.
இந்த அறிவிப்பை மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேற்கொண்டு இத்திட்டம் முறையாக செயல்படுகின்றதா என்பதை கண்காணிக்கும் வகையில் 18 நோட்டல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அந்த வகையில் இந்த இலவச அரிசி மற்றும் தானியமானது அனைத்து நியாய விலை கடைகளிலும் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் இத்திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 81 கோடி பேர் பயனடைவர் என்றும் தெரிவித்துள்ளனர்.