குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ 1000 – தலைமை செயலகத்திலிருந்து வெளிவரும் முக்கிய தகவல்!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக ரூ 1000 – தலைமை செயலகத்திலிருந்து வெளிவரும் முக்கிய தகவல்!

இன்று நடக்கும் முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்படுமா??
என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் தை-1 ஆம் தேதி பொங்கல் பண்டிகை தமிழ் நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கலை சிறப்பான முறையில் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களுக்கு அரசால் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

சென்ற வருடம் 21 பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் அது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்த ஆண்டு ரூ.1000 சேர்த்து வழங்குவதாக செய்திகள் கசிந்தன. இருப்பினும் இந்த தகவல் அரசால் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் அது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுவதாக உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.அதனை ஆளுநர் ரவி சமீபத்தில்
முறைப்படி முடித்து வைத்தார். அதனை அடுத்து ஜனவரி மாதம் நடக்க மீண்டும் சட்டசபை
கூட்டம் நடைபெற உள்ளது. கவர்னர் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத் தொடர் கூட
இருக்கும் தேதி, கவர்னர் உரையில் இடம் பெற கூடிய தகவல்கள் ஆகியன பற்றி இன்றைய
கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

இந்த கூட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 வழங்குவதற்கான திட்டத்தையும் அதை ரொக்கமாக வழங்கலாமா?? அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாமா?? என அதை வழங்குவதற்கான நடைமுறை குறித்து முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள்,அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதியும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Leave a Comment