விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிக அளவு லாபம் ஈட்டும் அசத்தல் திட்டம்!!
தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் மேற்கொண்டு அனைத்து இடங்களிலும் நெல் பயிர்கள் சேதம் அடையாத வண்ணம் சேமிப்பு கிடங்குகள் கட்டப் போவதாக கூறிவரும் நிலையில் தற்பொழுது அடுத்த புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
அந்த வகையில், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் ராமநாதபுரம் விற்பனை குழு கட்டுப்பாட்டின் கீழும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வர்த்தகம் மூலம் நெல் பயிர் விவசாயிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கொள்முதல் செய்யப்படும் வசதியை தற்பொழுது செயல்படுத்தி உள்ளனர்.
இதனால் விவசாயிகளின் ஏற்ற குழு இருக்கக்கூடிய வண்டி கோலி கூட இல்லாமல் அதிக லாபம் ஈட்டி உள்ளனர். அந்த வகையில் மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன் உரப்புலி கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என பலரிடமிருந்து 72 மூட்டை நெல் 8 லட்சத்திற்கு அவர்களது விளைநிலங்களில் இருந்தே நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு லாபம் ஈட்டும் விதமாக ஒரு மூட்டைக்கு ரூ. 70 முதல் ரூ 100 வரை விற்றுள்ளனர். இதனால் விவசாயிகள் பெருமளவு மகிழ்ச்சி அடைந்து இத்திட்டத்தை பெரிதும் போற்றி வருகின்றனர்.
இனிவரும் நாட்களில் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படும் மிளகாய் பருத்தி போன்றவற்றையும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து அதிக அளவு லாபம் ஈட்டலாம் என நம் மாவட்ட விற்பனை குழு செயலாளர் கூறியுள்ளார். இனி சாகுபடி காலம் என்பதால் விவசாயிகள் இம்முறையை பின்பற்றுவர் என கூறுகின்றனர்.