அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதிய உணவுடன் 3 முட்டை விநியோகம்!!
புதுச்சேரி மாநில அரசானது அனைத்து பள்ளி மாணவர்ளும் கட்டயாம் கல்வி கற்க வேண்டும் என்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் அவர்கள் கல்வி கற்க வேண்டும் மற்றும் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் தற்பொழுது தான் திறக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்புகள் அனைத்து நடத்தப்பட்டு வருகின்றது.
பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு ஒரு மாதங்கள் தான் ஆனா நிலையில் இன்னும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை. அதனால் அடுத்த மாதம் பள்ளி மாணவர்களுக்கு முட்டை விநியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
மேலும் அதற்கான பணி தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து அக்ஷயா பாத்திரம் என்ற தொண்டு நிறுவனம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றது. இந்த நிறுவனம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சைவ உணவை வழங்கி வருகின்ற நிலையில் இந்த நிறுவனத்துடன் இணைத்து மதியஉணவு சமைக்கும் கூடங்களின் மூலம் முட்டை வழங்கப்படும், என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் 293 பள்ளிகள் இயங்கப்பட்டு வருகின்றது.அதனால் வாரத்திற்கு 56 ஆயிரம் முட்டைகள் விநியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.