குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!மாதந்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை?

Photo of author

By Parthipan K

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!மாதந்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை?

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தொகுதியின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக வந்து ஒன்றரை வருடங்கள் முடிந்த நிலையிலும் அதன் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகாத நிலையில் விரைவில் இதற்கான தகவல் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது.

இருப்பினும் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இதனைத் தொடர்ந்து அரசு மாநிலத்தின் நிதி நிலையில் சரி செய்த பிறகு குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் புதுச்சேரி அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் அடுத்த மாதம் முதல் தமிழ்நாடு பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.அதன் முதல் கட்டமாக 50 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது