இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தங்கத்தின் விலை குறைவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. அதனால் மக்கள் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என எண்ணி தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள்.
அதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்தது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி வரலாறு காணாத அளவிற்கு உச்சம் பெற்றது. இந்நிலையில் கடந்த வாரங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் நேற்று ஒரு பவுன் தங்கம் 44,400 விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று பவுனுக்கு ரூ 80 குறைந்து 44 ஆயிரத்து 320 க்கும் விற்பனையாகின்றது. நேற்று ஒரு கிராம் ரூ 5550 விற்கப்பட்டது.
இன்று கிராமுக்கு ரூ 10 குறைந்து ரூ5540க்கும் விற்பனையாகின்றது. அதேபோலவே வெள்ளியின் விலையில் இன்று மாற்றம் இல்லை ஒரு கிராம் வெள்ளி 76 விற்கப்படுகிறது. ஒரு கிலோ 76 ஆயிரத்துக்கு விற்பனையாகின்றது.