பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் 156 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம் !! மத்திய அரசின் மகத்தான அறிவிப்பு !!
மத்திய அரசு 156 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வரும் இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பிப்பர். சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் சில நாட்களுக்கு பின்னர் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
இந்நிலையில் நாடு முழுவதும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை மகாராஷ்டிரா உள்ளிட்ட சில வட மாநிலங்களில் 10 நாட்கள் கொண்டாடப் படுவது வழக்கம்.
இதையடுத்து பல்வேறு பகுதிகளில் பணிபுரியும், மற்றும் வேலை நிமித்தமாக வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்த மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் வகையில் மொத்தம் 156 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
மேலும் இதற்கான முன்பதிவும் தொடங்க இருக்கிறது. அதன்படி ஜூன் 27 ஆம் தேதி முதல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.