ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! டிஜிட்டல் முறையில் இந்த சான்றிதழ் பெறலாம்! 

0
199
Happy news for pensioners! Get this certificate digitally!
Happy news for pensioners! Get this certificate digitally!

ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்! டிஜிட்டல் முறையில் இந்த சான்றிதழ் பெறலாம்!

ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால் இந்த உத்தரவின் பேரில் ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று அவரவர்களின் உயர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சிரமப்படுகின்றனர்.

அதனால் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சார்பில் ,ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோமெட்ரிக் முறையில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண் ,மொபைல் எண் ,பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை முழுமையாக தெரிவித்த பிறகு கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒருசில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

அதனையடுத்து இந்த சேவைக்கு கட்டணமாக தபால்காரரிடம் 70ரூபாய் செலுத்த வேண்டும்.இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ள வேண்டும்.https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது போச்டின்போ என்ற செயலி மூலமாகவோ சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்

Previous articleமருத்துவ கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை! இவ்வாறு இனி செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்! 
Next articleவணக்கம் நண்பர்களே… அஜித் படத்துல நடிக்க கேட்டுருக்காங்க… செம்ம அப்டேட் கொடுத்த ஜி பி முத்து!