கர்ப்பிணி பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்! இணையவழியில் அடையாள எண் பெறலாம்!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் 2008 ஆம் ஆண்டு தேசிய தகவல் மையத்தால் தொடங்கப்பட்டது தமிழகத்தில் பேறுகால கண்காணிப்பு இணையதளம். இதில் கர்ப்பிணிகளின் கர்ப்பகால விவரங்களை பதிவு செய்தல் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசி இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
மேலும் இதில் ஆண்டுதோறும் 11 லட்சம் தாய்மார்களின் தகவல்கள் பிக்மீ இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது என கூறினார். மேலும் தாய்மார்களுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்ட கர்ப்ப பதிவு முதல் குழந்தை பிறந்த ஐந்து ஆண்டுகள் வரை தாய் சேய் நல சேவை விவரங்களைக் பிக்மியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசால் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு தாய்மார்களுக்கு அடையாள எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது கிராம சுகாதார செவிலியர் மூலம் கர்ப்ப பதிவு செய்து அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. தாய்மார்களின் அடையாள என் பெறுவதை மேலும் எழுதாக்கும் வகையில் ட்ட்ற்ற்ல்://ல்ண்ஸ்ரீமிங்.ற்ய்.ஞ்ர்ஸ் என்ற இனையதளத்தில் தாமே சுய பதிவு செய்த அடையாள எண் பெறும் வசதி கடந்த மே மாதம் 27ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேலும் மே மாதம் 27ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை 230 கர்ப்பிணி தாய்மார்கள் இணையதளத்தை பயன்படுத்தி தங்களின் கர்ப்பத்தின் சுய பதிவு செய்து தங்கள் தனிப்பட்ட அடையாள எண்ணை பெற்றுள்ளனர்.
மேலும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் எவ்வித சிரமம் என்று தங்களுக்கான தனிப்பட்ட அடையாள எண்ணெய் சுயப் பதிவு செய்து கொள்ள இந்த திட்டமானது வசதியாக உள்ளது எனவும் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் சுய பதிவு பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்காக யூடியூப் இணைவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.