பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! உயருகிறது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம்!!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதமானது 8.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்தியாவில் தொழிலாளர் நலத்துக்காக பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து வருங்கால வைப்பு நிதிக்கு சிறிய தொகை பிடித்தம் செய்யப்படுவது வழக்கம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) ஆனது ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டாயமாக பிடிக்கப்படும் வைப்புத் தொகையாகும். ஒவ்வொரு ஊழியரும் தனது சம்பளத்தில் 12 சதவீதத்தை மாதாந்திர அடிப்படையில் EPF கணக்கில் டெபாசிட் செய்கிறார்.
இந்த சூழ்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் (இ.பி.எப்) வட்டி விகிதமானது கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதமாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வண்ணமாக மத்திய நிதி அமைச்சகம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி ஆணையிட்டுள்ளது. இதன்படி தற்போது உள்ள 8.10 சதவீத வட்டி விகிதமானது 8.15 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வட்டியின் வீதம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.