SETC பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி நேரடியாகவே புகாரளிக்கலாம்!! 

0
122
Happy news for SETC bus commuters!!
Happy news for SETC bus commuters!!

SETC பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி நேரடியாகவே புகாரளிக்கலாம்!!

SETC பேருந்தில் மிக அதிக தூரம் பயணிப்பவர்கள்  எப்பொழுதும் சில புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த பேருந்தில் பயணிப்பவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கு என்று சில இடங்களில் நிறுத்தப்படுகின்றது.

இந்நிலையில்  பேருந்து நிற்கும் இடத்தில் அதிக விலையில்  உணவு பொருட்கள் விற்கப்படுவதும் , சாப்பிடப்படும் பொருட்கள் துய்மையற்றும் சுகாதார மின்றியும் இருப்பதாகவும், முறையான கழிவறை வசதிகள் எதுவுமில்லை என்றும் இருந்தாலும் அவையாவும் சரியான பராமரிப்பில் இல்லை என்றும் பல புகார்கள் வருகின்றது.

இந்த புகாரின் பேரில் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர்  சிவசங்கர் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதன்படி டிக்கெட் முன் பதிவு செய்யும் பயணிகளின் செல்போன்  எண்ணிற்கு feed back link என்ற இணைப்பு ஒரு இணைக்கப்படுகிறது. இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் இடங்களில் உணவுகள் மற்றும் கழிவறை வசதிகளில் உள்ள நிறை மற்றும் குறை இவை இரண்டையும் இதன் வாயிலாக தெரிவிக்கலாம்.

இவற்றின் மூலம் பெறப்படும் அனைத்து புகார்களின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை   அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த பேருந்துகளில் பயணிப்பவர்கள் நீண்ட தூரம் செல்கிறனர் என்ற சிரமத்தை தாண்டி உணவு மற்றும் கழிவறை வசதி போன்றவற்றில் தான்  அதிக சிரமம் அடைகின்றனர்.இந்த புதிய வசதி மூலம்  இது போன்ற தவறுகள் அனைத்தும் சரி செய்யப்படும் இனி மக்கள் அனைவரும் நிம்மதியாக பயணிக்கலாம்.

author avatar
Parthipan K