மாணவர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Photo of author

By Kowsalya

மாணவர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Kowsalya

மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வினால் மாணவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சரியாக படிக்க முடியாமல் அதற்கான பயிற்சிகள் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

அனைத்து அரசியல் கட்சிகளும் சரி, பொதுமக்களும் சரி எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த நீட் தேர்வு முக்கியமாக கருதப்படுவதால் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற பல்வேறு திட்டங்களை செயல் முறை படுத்தி வருகிறது. பயிற்சி பள்ளியில் இருந்து பல ஏற்பாடுகளை செய்து வருகிறது தமிழக அரசு.

இப்பொழுது தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இலவச அம்மா மடிக்கணினி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த நீட் தேர்விற்காக இலவச பாடங்களை அந்த லேப்டாப்பில் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த ஆண்டு வழங்கப்படும் இலவச மடிக்கணினியில் நீட் தொடர்பான பாடங்கள், குறிப்புகள், கேள்விகள், வீடியோ பாடங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மக்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.