மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இங்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

Photo of author

By Parthipan K

மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இங்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு நடைபெற்றது. அதற்காக அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 15ஆம் தேதி முதல் 4 நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் இம்மாதம் 13 ஆம் தேதி பத்தாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. நேற்று பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மார்ச் 1 முதல் மார்ச் 4ஆம் தேதி வரையிலும் இரண்டாவது கட்டமாக மார்ச் 6-ம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும்  மார்ச் 13ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த விடுமுறையை ஈடு  செய்யும் விதமாக அடுத்த மாதம் ஏப்ரல் ஒன்றாம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் இன்று கஸ்தூரி விழா நடைபெறுகின்றது.அதனால் அந்த விழாவை  முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை வழங்கி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாளில் பள்ளி வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வு வழக்கம் போல நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.