குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்,!  இன்னும் 5 மாதத்தில்  உரிமைத் தொகை – அமைச்சர் வெளியிட்ட உறுதியான தகவல் 

0
297
#image_title

குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்,!  இன்னும் 5 மாதத்தில்  உரிமைத் தொகை – அமைச்சர் வெளியிட்ட உறுதியான தகவல் 

இன்னும் ஐந்து மாதங்களில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியான தகவலை தெரிவித்துள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் இ.வி.கே எஸ் இளங்கோவனை ஆதரித்து பேசுவதற்காக மாலை ஈரோடு வந்தார். அப்போது அவர் ஈரோட்டில் கணபதி நகர், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் பேசி ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் பொதுமக்களிடம் கூறியதாவது,

தந்தை பெரியாரின் பேரனுக்கு கலைஞர் கருணாநிதியின் பேரனாகிய நான் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். கடந்த தேர்தலில் திருமகன் ஈவேராவை 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதேபோல் தற்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

மோடியிடம் கட்சிப் பிரச்சனைக்காக ஓடிச் செல்லும் எடப்பாடியும் ஓபிஎஸ்சும் என்றைக்காவது மக்கள் பிரச்சனைக்காக சென்றுள்ளார்களா? ஆட்சியில் இருந்த பொழுது இரண்டு பேரும் ஒற்றுமையாக இருந்தார்கள் நீ முதலமைச்சர். நான் துணை முதலமைச்சர். நீ ஒருங்கிணைப்பாளர். நான் துணை ஒருங்கிணைப்பாளர். என்றுதான் ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்தார்கள். ஆட்சி போனதும் இரண்டு பேரும் வீதியில் இறங்கி சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.

ஒரு பொட்டல் காடாக கிடந்த படத்தை காட்டி இதுதான் மதுரைக்கு பிரதமர் மோடி வந்தபோது ரூ 3000 கோடி செலவில் மதுரைக்கு கட்டியை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி. இதற்கு ரூம் 300 கோடி செலவு செய்ததாக கணக்கு காட்டி இருக்கிறார்கள். அந்த 300 கொடியில் கட்டப்பட்ட ஆஸ்பத்திரி இதுதான். அங்கே இருந்தது ஒரே ஒரு செங்கல் தான். அதையும் மக்களிடம் எடுத்துக்காட்டி இதை நான் எடுத்து வந்து விட்டேன்.

இந்த சூழ்நிலையில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என்று அறிவித்து இருக்கிறார். இதுதான் பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் மதுரைக்கு கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை.

மேலும் அவர் கூறுகையில் ஈரோடு தேர்தலில் வெற்றிக்கு பின் ரூ.1000 கோடியில் பல்வேறு நலத்தட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார்.

அதேபோல் பெண்களின் மனதில் உள்ள கோரிக்கை பற்றி எனக்கு தெரியும். பெண்களுக்கான மாதாந்திர உரிமை தொகையான 1000 அதிகபட்சமாக இன்னும் ஐந்து மாதங்களுக்குள் வழங்க  உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Previous articleட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக்கிற்கு கட்டணம் – விரைவில் அறிமுகம்!
Next articleஇந்திய பெருங்கடலில் பயங்கர வெப்பமண்டல சூறாவளி புயல் – சர்வதேச விண்வெளி மையம் அதிர்ச்சி தகவல்