ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும்!!

0
100
Happy news for train passengers!! Canform tickets are now available!!
Happy news for train passengers!! Canform tickets are now available!!

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும்!!

பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். அதனால் பயணிகள் மிகவும் பேருந்து ,விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

இதில் அதிகம் சாமானிய  மக்கள்தான்  விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் பயணம் செய்பவர்களுக்கு வழங்கி வருகின்றது.

இதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உதவும் வகையிலும் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையிலும் சிறப்பு பேருந்துகளை ரயில்வே துறை இயக்கி வருகின்றது.

மேலும் ரயில்லில் பயணம் செய்ய தொலை தூரத்தில் இருந்து வரும் பொதுமக்கள் நலன் கருதி அவர்களுக்கு தங்கும் அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

இப்படி பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் சிலருக்கு திடீரென்று ரயில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.அந்த நேரத்தில் பயணம் செய்ய விரும்புபவர்கள் சாதாரண பெட்டியில்  பயணம் செய்வார்கள்.இப்படி தீடிரென்று பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இந்த சூழ்நிலை கருதி ரயில்வேதுறை புதிய சலுகை ஒன்றை ரயில் பயணிகளுக்கு அறிவித்துள்ளது.இந்த சலுகையின் UTS என்ற ஆப்பின் மூலம்  முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த ஆப்பின் மூலம் ரயில் டிக்கெட் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட்களை பெற்று கொள்ளலாம்.ரயில்வே துறை வெளியிட்ட இந்த புதிய வசதி திடீர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

UTC என்ற ஆப்பை பதிவிறக்க பயணிகள் தங்களது செல்போன் எண்ணை பயன்படுத்தி அதில் வரும் கடவுசொல்லை மட்டும் பதிவு செய்தால் போதும். இந்த புதிய வசதியின் மூலம் ரயிலின் அனைத்து டிக்கேட்களையும் முன்பதிவு செய்யலாம்.

இந்த வசதின் மூலம் எவ்வளவு டிக்கெட்கள் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.நாம் ரயில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அதனை ரத்து செய்யவும் முடியும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Previous articleமாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் வெளிநாடுகளுக்கு சுற்றுலா!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!
Next articleஉங்கள் தலையில் பொடுகு அதிகமாக இருக்கா… பொடுகுத் தொல்லை போக இந்த இரண்டு பொருள்கள் போதும்…