கொங்கு மக்களே ஹாப்பி நியூஸ்!! பேருந்துகள் மாற்றம் போக்குவரத்து துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

கொங்கு மக்களே ஹாப்பி நியூஸ்!! பேருந்துகள் மாற்றம் போக்குவரத்து துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

இந்தியாவில் மிகப்பெரிய பேருந்து போக்குவரத்தை கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். மேலும் தமிழ் நாட்டில் அதிக அளவில் பேருந்துகள் மற்ற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இயக்கபடுகிறது.

தமிழ்நாட்டில் எஸ்இடிசி பேருந்துகள் மாற்றம் செய்யபட்டது அது போல மாநகர, நகர பேருந்துகளும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் உள்ளது. மேலும் அதிக அளவில் பழைய பேருந்துகள புனரமைக்கப்படாமல் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து பேருந்துகள் கடந்த சில மாதங்களாக பேருந்துகள மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இதில் முதல் கட்டமாக எஸ்இடிசி பேருந்துகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பச்சை நிறத்தில் இருக்கும் பேருந்துகள் மஞ்சள் நிறமாக மாற்றப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து பேருந்துகளின் உள்ளேயும் பல மாற்றங்களும், புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவல் தமிழ்நாட்டு மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த புதிய எஸ்இடிசி பேருந்துகள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் மேற்கு மாவட்டங்களுக்கும் புதிய பேருந்துகள் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மாநகர மற்றும் நகர பேருந்துகளும் மாற்றம் செய்யப்பட உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தனித்தனியாக பேருந்துகள் மராம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதன் பணி முதல் கட்டமாக கொங்கு மண்டலங்களில் தொடங்க உள்ளது. இந்த பணி சேலம் கோட்ட அரசு நகரப்பேருந்துகள் கொங்கு மண்டல தனியார் பணிமனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து நகர பழைய பேருந்துகளும் மாற்றம் செய்யப்பட்டு புத்தம் புதிய பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது. பேருந்துகளின் புத்தம் புதிய இளம் நீல நிறத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் பேருந்துகள் மாற்றப்பட்டு வருகிறது. இந்த புதிய மாற்றம் மக்கள் இடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.