மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! இந்த ஐந்து மாவட்டங்களில் புதிய விமான நிலையம்!
தமிழகத்தில் கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. அதில் திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦ உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துக்களில் கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தது.
எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது அதனை தொடர்ந்து நான் முதல்வன் திட்டம், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்குதல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ. 1000 உரிமை தொகை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இந்த திட்டம் முற்றிலும் பொய்யானது என எதிர்கட்சிகள் பல்வேறு தரப்பில் குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவ்வப்போது கூறி வந்தார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி நடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦ உரிமை தொகை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெற படுத்தப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தமிழகத்திற்கு பல்வேறு நலத்தட்ட உதவிகளை அரசானது செய்து வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு விமான சேவை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதில் தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் அந்த மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். மேலும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.