அமைச்சர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை!
சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே. கணேசன் தலைமையில் நடைபெற்றது.அதில் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.
மேலும் அந்த கூட்டத்தில் அமைச்சர் கூறுகையில் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திருமணம், கல்வி, கண் கண்ணாடி, மகப்பேறு, ஓய்வூதியம், உட்பட பல வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தீப்பெட்டி தொழிலார்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் தற்போது வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விரோதமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதனை அடுத்து தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயில ஆண்டுதோறும் 1௦௦௦ ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தொழிலாளர் இயற்கை மரணம் அடைந்தால் அவரின் குடும்பத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு விபத்து காரணமாக மரணமடைந்தால் அவரின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.25 லட்சமாக உயர்த்தி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.