கேரளம் மாநில மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஓணம் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

 

கேரளம் மாநில மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஓணம் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு…

 

கேரளம் மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓணம் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று கேரளம் மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

கேரளம் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்துள்ள நபர்களுக்கு ஓணம் பரிசு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் 6 லட்சம் ரேஷன் அட்டை தாரர்களுக்கு இந்த பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் “வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 5, 87, 691 பேருக்கும், நலவாழ்வு மையங்களில் வாழும் 20000 ரேஷன் அட்டைதார்களுக்கும் 3ந்த ஆண்டு ஓணம் பரிசு தொகுப்பு வழக்கப்படவுள்ளது.

 

இந்த பரிசு தொகுப்பில் தேயிலைத்தூள், சேமியா பாயசம் மிக்ஸ், சிறுபருப்பு, தேங்காய் எண்ணெய், மிளகு பொடி, சாம்பார் பொடி, முந்திரி பருப்பு, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, நெய், துவரம் பருப்பு, உப்பு, சிறுபயறு ஆகிய பொருட்தள் இருக்கும். இந்த ஓணம் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும். இதற்காக 32 கோடி ரூபாய் முன்பணமாக சப்ளை கோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

 

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஓணம் பரிசுத் தொகுப்பு விரைவாக ரேஷன் கடைகளுக்கு கெண்டுவரப்பட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் பொழுது 86 லட்சம் மக்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மாநிலத்தின் நிதி நெருக்கடி காரணமா 607691 பேருக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

 

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஓணம் பரிசு தொகுப்பில் 17 பொருள்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு வழங்கப்படவுள்ள ஓணம் பரிசு தொகுப்பில் உலர் அரிசி, சர்க்கரை வரட்டி, சீனி, ஏலக்காய் ஆகிய நான்கு பொருள்கள் நீக்கப்பட்டு 13 பொருட்கள் அடங்கிய ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.