ஹேப்பி நியூஸ் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! காரணம் இது தான்!!

Photo of author

By Amutha

ஹேப்பி நியூஸ் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! காரணம் இது தான்!! 

நாளை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி வட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை பெருவிழா வருகின்ற 11ஆம் தேதி வரை வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் திருத்தணியில் இருந்து மலை கோவிலுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பிற ஊர்களில் இருந்து திருத்தணி செல்வதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி முருகன் கோவில் மிகவும் புகழ்  பெற்ற மிகவும் பழமையான கோவிலாகும். 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் ரத்தனகிரி மலை உச்சியில் அமைந்துள்ளது. ஆடு மேய்க்கும் சிறுவன் வடிவில் தனது பின் பக்திக்கு முருகப்பெருமான் காட்சி தந்த சிறப்பு தலம் இதுவாகும்.

இந்த நிலையில் நாளை ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி ஆடி கிருத்திகை திருநாளாகும். இந்த நாளை முன்னிட்டு ரத்தனகிரி முருகன் கோவில் மற்றும் திருத்தணி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வார்கள் என்பதால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நாளை ஈடு செய்யும் விதமாக வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.