மோசடி கும்பலால் அக்கவுண்டில் உள்ள பணம் பறிபோகி விட்டதா? 24 மணி நேரத்தில் பணம் கிடைக்க உடனே இந்த எண்ணை அழையுங்கள்!!!

0
151

மோசடி கும்பலால் அக்கவுண்டில் உள்ள பணம் பறிபோகி விட்டதா? 24 மணி நேரத்தில் பணம் கிடைக்க உடனே இந்த எண்ணை அழையுங்கள்!!!

தொழில்நுட்பம் வளர்ந்ததால் பல நன்மைகளும் அதற்கேற்றார் போல் தீமைகளும் உண்டாகிறது. அந்த வகையில் தினந்தோறும் பலர் மர்ம கும்பலால், வங்கியில் இருக்கும் பணத்தை பறிகொடுத்து விடுகின்றனர். அவ்வாறு பறிகொடுத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். அவ்வாறு இருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

முதலில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அழைப்பு வந்தாலே நாம் அதனை துண்டித்து விட வேண்டும். மேலும் அது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம். விழிப்புணர்வு இல்லாதவர்கள் பலர் மர்ம கும்பலிடம் பேசி அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுத்து பணத்தை பறிகொடுத்து விடுகின்றனர்.

அதேபோல பணத்தை பறிகொடுத்தவர்கள் முதலில் எங்கு யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்பதையும் அறியாமலே உள்ளனர். முதலில் மர்ம கும்பலால் வங்கியில் உள்ள பணம் பறிபோனால் முதலில் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.155260 என்ற எண்ணுக்கு உடனடியாக புகார் அளிக்கலாம். நீங்கள் எவ்வளவு விரைவில் புகார் அளிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களது பணம் மோசடி கும்பலுக்கு செல்லாமல் பாதுகாக்கப்படும்.

அதேபோல ஒரு வங்கி கணக்கில் இருந்து வேறொரு வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலமாக பணம் பரிமாற்றம் செய்ய சுமார் அரை மணி நேரம் ஆகும். அதற்குள் நீங்கள் புகார் செய்தால் உங்களது பணம் மீண்டும் திரும்ப கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அது 24 மணி நேரத்திற்குள் புகார் செய்தால் பணத்தை யார் எடுத்தார்கள் என்பதை கண்டுபிடித்து மீண்டும் கிடைக்க வழி செய்வர்.

Previous articleEarphones நீண்ட நேரம் பயன்படுத்துறீங்களா? போச்சு! இத படிங்க!
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும் நாள்!