“திராவிடியா பசங்க” ஹேஷ்டாக்! திமுக பெண் நிர்வாகியை லெப்ட் ரைட் வாங்கிய நடிகை கஸ்தூரி! 

Photo of author

By Rupa

“திராவிடியா பசங்க” ஹேஷ்டாக்! திமுக பெண் நிர்வாகியை லெப்ட் ரைட் வாங்கிய நடிகை கஸ்தூரி!

திமுகவை சேர்ந்த பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் நடிகை குஷ்பூ, காயத்ரி ரகுராமன், நமீதா ஆகியோரை அவதூறாக பேசினார். இவ்வாறு திமுக பேச்சாளர் பேசியது குறித்து குஷ்பூ ட்விட்டரில் கனிமொழியை டேக் செய்து பதிவு ஒன்று போட்டுள்ளார். குஷ்பூ போட்ட பதிவிற்கு கனிமொழி மன்னிப்பு கேட்டு ரி ட்விட் செய்தார். இவ்வாறு குஷ்பூ, நமிதா, காயத்ரி ரகுராமன் ஆகியோரை அவதூறாக பேசியது குறித்து நடிகை கஸ்தூரியும் அவரது ட்விட்டர் பக்கத்தில் திராவிடிய_ பசங்க என்ற ஹேஷ்டேக் போட்டு பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இந்த ஹேஷ் டாக் ட்விட்டரில் பெரிதும் ட்ரெண்டானது. இதனை கண்ட திமுகவை சேர்ந்த மருத்துவர் மற்றும்  சின்னத்திரை நடிகையான ஷர்மிளா, கஸ்தூரியை டேக் செய்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், திமுக பேச்சாளர், நடிகைகளை  பற்றி அவ்வாறு கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் அது மன்னிக்கப்பட வேண்டியது மேடம் என கூறினார். அதோட நீங்கள் தற்பொழுது ட்விட்டரில் போட்டுள்ள ஹாஷ் டேக்கை பலரும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

நீங்களும் அதனை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன் என்பதை மறைமுகமாக இவர் கூறினார். இதற்கு கஸ்தூரி மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார். அதில், மன்னித்தல் என்பது ஏற்றுக் கொள்வது என்று பொருள். ஆனால் நீங்கள் கூறிய கண்டனம் என்றால் எதிர்ப்பு தெரிவிப்பது என்று பொருள்படும். நல்ல வேளை கடவுளுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் கண்டனத்திற்கு பதில் காண்டம் என்று எழுதவில்லை.

மேலும் இவர் உண்மையான டாக்டரா அல்லது வசூல் ராஜா படத்தில் வருவது போல ரவுடி டாக்டரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்? அது மட்டும் இன்றி திராவிடம் என்பது வெட்கக்கேடான ஒன்று என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.