இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹாஸ்டேக்!! சாதனை படைத்த சூர்யா ரசிகர்கள்!!

0
204
Hashtag is a trend in India !! Record Surya fans !!
Hashtag is a trend in India !! Record Surya fans !!

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹாஸ்டேக்!! சாதனை படைத்த சூர்யா ரசிகர்கள்!!

சரவணகுமார் எனப்படும் சூர்யா இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குகிறார். மேலும் இவர் தயாரிப்பாளர் மட்டும் தொலைக்காட்சி  தொகுப்பாளர் ஆகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இவர் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளும், நான்கு பிலிம்பேர் விருதுகளும், 2 எடிசன் விருதுகளும் மற்றும் விஜய் விருதுகளும் பெற்றுள்ளார். மேலும் இந்திய பிரபலங்களின் வருவாயின் அடிப்படையில் சூர்யா ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 1௦௦ பட்டியலில் 6 முறை சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் நேருக்கு நேர் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு நந்தா திரைப்படத்தில் தனது திருப்புமுனையான கதாபாத்திரத்தில் இறங்கினார். இதிலிருந்து அவரின் பெயர் சூர்யா என்று அழைக்கப்பட்டது. மேலும் இதை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வெற்றி வாகை சூடினார். மேலும் இவர் நடித்த அனைத்து படமுமே பெரும் வெற்றியை கண்டது. இவரின் ரசிகர்கள் பெருமளவு இவரை ஆதரித்தனர்.
இதைத் தொடர்ந்து இவரின் 40வது படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இவரின் ரசிகர்கள் இணையத்தில் பெரும் சாதனையை படைத்துள்ளனர். அது என்னவென்றால், வரும் ஜூலை 23 ஆம் தேதி சூரியாவுக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் காமன் டிபி வைத்து உள்ளனர். மேலும் இந்த காமன் டிபிக்காக ட்விட்டரில் #SuriyaBdayCDPCarnival என்ற ஹாஸ்டேக்கினை  பகிரப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த ஹாஸ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் அவரின் பிறந்த நாளை எதிர்பார்த்து வருகின்றனர்.

Previous articleவாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 30க்குள் இது மிகவும் கட்டாயம்!! SBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
Next articleகாவேரி குறுக்கே புதிய அணை!! ஸ்டாலின் டெல்லி செல்கிறார்!! விவசாயிகள் அச்சம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here