சமூகவலைதளமான டிவிட்டரில் தங்களின் ஆதரவு எதிர்ப்பு என எதை பதிவு செய்ய வேண்டுமானாலும் அதனை ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்வது வழக்கமாக உள்ளது. தற்போது தேசிய அளவில் #தமிழ்நாடு டிரெண்டாகி வருகிறது. இதற்கு காரணம் என்னவென பார்க்கும் போது தமிழக ஆளுநரின் கருத்து ஒன்றுக்கு தமிழ்நாட்டு மக்கள் தங்கள் எதிர்ப்பை இந்த ஹேஷ்டேக் மூலம் தெரிவித்து வருவதோடு அவர்கள் தமிழ்நாடு என தான் அழைப்போம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏறபாடு செய்திருந்தனர். இதில், கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி நாட்டில் எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதனை எல்லா பகுதிகளிலும் செயல்படுத்தினாலும் தமிழ்நாட்டில் மறுப்பு தெரிவிக்கின்றனர் என தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு என குறிப்பிடாமல் தமிழகம் என கூறவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர்,பொதுமக்கள் என பலரும் ஆளுநரின் கருத்த்துக்கு கண்டன் தெரிவித்ததோடு இனி தமிழ்நாடு குறித்து பல கருத்துகளையும் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கில் பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது இந்திய அளவில் ட்ரெண்டான இந்த ஹேஷ்டேக்கில் இதுவரை இலட்சத்திற்கும் மேற்பட்ட டிவிட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன. தமிழக மக்கள் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தை எந்த சூழ்நிலையும் விட்டு கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு இந்த ட்ரெண்டிங்க் ஒரு சான்று எனவும் இனி ஆளுநர் தான் கூறும் கருத்துகளை கவனமுடன் கூறவேண்டும் எனவும் பதிவிட்டு வருகின்றனர்