உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் தோல்வி! தடுமாறும் நியூசிலாந்து அணி!!
நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர் தோல்விகளால் தடுமாறும் அணிகளில் நியூசிலாந்து அணியும் ஒரு அணியாக மாறியுள்ளது. நியூசிலாந்து அணி நேற்று(நவம்பர்1) நடைபெற்ற போட்டியில் தோல்வி பெற்றதன் மூலமாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது தோல்வியை பெற்றுள்ளது.
நேற்று(நவம்பர்1) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 32வது லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது.
முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணியில் குயின்டன் டிகாக்(114 ரன்கள்), ராசி வென் டர் டுசேன்(133 ரன்கள்), டேவிட் மில்லர்(53 ரன்கள்) ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் சேர்த்தது.
359 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மென்கள் அனைவரும் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் சேர்த்து தோல்வியை தழுவியது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கிளென் பில்லிப்ஸ் அரைசதம் அடித்து 60 ரன்களும், வில் யங் 33 ரன்களும் சேர்த்தனர். டேரி மிட்செல் 24 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணியில் சிறப்பாக பந்துவீசிய கேசவன் மஹராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கோட்சே இரண்டு விக்கெட்டுகளையும், ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தென்னாப்பிரிக்க அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் 6வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நேற்றைய(நவம்பர்1) போட்டியில் தோல்வி பெற்றதன் மூலமாக மூலமாக தொடர்ந்து மூன்றாவது முறையாக நியூசிலாந்து அணி தோல்வி பெற்றது. இந்த ஹாட்ரிக் தோல்வி நியூசிலாந்து அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மீதம் உள்ள உண்டு போட்டிகளிலும் நல்ல ரன்ரேட் பெற்று வெற்றி பெற்றால் மட்டுமே நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். தொடர்பு தோல்விகள், அணியில் கேன் வில்லியம்சன் இல்லாதது எல்லாம் நியூசிலாந்து அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது.