இந்தியா ஹாட்ரிக் வெற்றி! அதிரடி சிக்ஸர் மழை பொழிந்து ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரோகித் சர்மா!
இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற காரணமாக இருந்ததுடன் அதிக சிக்ஸர்கள் அடித்து ஒரு புதிய சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.
நியூசிலாந்து இந்தியாவில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த கடைசி ஒரு நாள் போட்டி மகாராஷ்டிரா இந்தூரில் உள்ள ஹோல்கேர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 101,சுப்மன் கில் 112, ஆகியோரின் சதத்தால் 50 ஓவர்களில் 385 என்ற இமாலய இலக்கை ஸ்கோர் செய்தது.
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணியில் டேவான் கான்வே 138, நிக்கோலஸ் 42, ஜோடி மட்டும் நிலைத்து நின்று ஆடி ஸ்கோர் செய்தது. அடுத்து வந்த மிடில் ஆர்டரில் யாரும் சரிவர ரன் எடுக்காததால் விக்கெட்டுகள் சரிந்து 41.2 ஓவரில் நியூசிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறியது.
இந்த வெற்றிக்கு காரணமான ரோகித் சர்மா, சுப்மன் கில், ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தை இந்திய அணிக்கு தொடங்கி வைத்தனர். அதிலும் ரோகித் சர்மா அதிரடி காட்டி விளையாடி சிக்ஸர் பௌண்டரிகளாக பறக்க விட்டு 85 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் ரோகித் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 6 சிக்சர்கள் அடிக்கும் பொழுது இலங்கையின் சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளி அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 267 சிக்ஸர்கள் அடித்து நான்காவது இடத்தில் ரோகித் சர்மா இடம்பெற்று இருந்தார். அவருக்கு முன்னால் ஜெயசூர்யா 270 சிக்ஸர்கள் அடித்து பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 சிக்ஸர்கள் அடித்தது மூலம் 273 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்திற்கு ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளார்.
இந்த தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி 351 சிக்சர்களுடன் முதலிடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிரீஸ் கெயில் 331 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.