வெறுப்பு பேச்சு விவகாரத்தில் வழக்கு பதிவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மேல்முறையீடு!

0
168
#image_title

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் வழக்கு பதிவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மேல்முறையீடு!

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா கரத்தின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்ததது.

கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான போராட்டம் குறித்து வெறிப்பார பேசியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா கரத்தின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜூனில் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மேல்முறையீடு மனுவை பரிசீலித்த நீதிபதிகள் அது தொடர்பாக மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க டெல்லி காவல் துறைக்கு கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி உத்தரவிட்டனர்.

இன்று நடைபெற்ற விசாரணையின் போது டெல்லி காவல்துறை சார்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற உச்ச நீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு கூடுதல் அவகாசம் அளித்து விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Previous articleஐசிசி விதிகளில் 3 மாற்றங்கள்!! என்னென்ன புதிய விதிகள்!!
Next articleதூத்துக்குடி அருகே இயங்கி வரும் கழிவு மீன் நிறுவனங்களை மூடக்கோரி ஆட்சியரகத்தில் பொதுமக்கள் மனு!!