கருமையான அக்குள் இருக்கா! அதை நீக்க இதோ சில வழிகள்!!

Photo of author

By Sakthi

கருமையான அக்குள் இருக்கா! அதை நீக்க இதோ சில வழிகள்
நம்மில் சிலருக்கு அக்குள் பகுதிகளில் கருமையான நிறம் இருக்கும். இது ஒரு விதமான சத்து குறைபாடு என்று கூறலாம். இந்த கருமையான நிறத்தை மாற்றுவதற்கு ஆங்கில மருந்துகள் இருந்தாலும் நாம் வீட்டு வைத்திய முறை எதுவும் நிகராக இருக்காது. அந்த வகையில் கருமையான அக்குள் நிறத்தை போக்குவது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அக்குள் பகுதிகளில் இருக்கும் கருமையான நிறத்தை மாற்றுவதற்கு தயிரை பயன்படுத்தலாம். தயிரை நேரடியாக எடுத்து அப்படியே அக்குளில் பயன்படுத்தக்கூடாது. அதற்கு முன்பாக திருடன் ஒரு சில பொருட்களை சேர்த்து அதன் பின்னர் அக்குளில் தேய்த்து வந்தால் போதும். தயிருடன் வேறு எந்தெந்த பொருட்கள் சேர்ப்பது எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.
அக்குள் கருமையை போக்குவதற்கு தேவையான பொருட்கள்…
* தயிர்
* மஞ்சள் தூள்
* எலுமிச்சை
* தேன்
செய்முறை…
சிறிய பவுலிங் தேவையான அளவு தயிர். எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் சிறிதளவு தேன். சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இறுதியாக இதில் சிறிதளவு எலுமிச்சை பிழிந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதோ அக்குள் கருமையை பறக்கும் மருந்து தயார்.
இதை சிறிதளவு எடுத்து அக்குள் பகுதியில் அதாவது கருமை நிறம் உள்ள அக்குள் பகுதியில் தேய்த்துக் கொள்ள வேண்டும். தேய்த்து பின்னர் 10 நிமிடம் ஊற வைத்து அதன் பின்னர் இதை கழுவி விடலாம். இவ்வாறு தினமும் செய்து வந்தால் அக்குள் பகுதியில் உள்ள கருமை நிறம் மறைந்து வெண்மையாக மாறும்.