மரப் பொருட்கள்,வீட்டு சுவர் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து சேதப்படுத்தும் கரையானை ஒழிக்க முடியாமல் பலரும் போராடுகின்றனர்.மரத்தை உண்ணும் பூச்சி வகையான கரையான் வீட்டில் அழகிற்காக வைத்துள்ள மர சாமான்களை அரித்துவிடுகிறது.
கதவு,ஜன்னல்,பெட் கட்டில்,தூண்,பீரோ போன்றவை மரத்தால் செய்யப்பட்டவையாக இருந்தால் அடிக்கடி அதை பராமரிக்க வேண்டும்.வீட்டில் மரத்தூள்,ஈரப்பதத்துடன் கூடிய வாசனை வந்தால் கரையான் இருக்கக்கூடும்.
மண் வீடாக இருந்தால் கரையான்கள் எளிதில் அதை அரித்துவிடும்.எனவே முன்னெச்சரிக்கையாக சில விஷயங்களை செய்து அதன் வரவிற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
1)எலுமிச்சம் பழம்
2)வினிகர்
பாத்திரம் ஒன்றை எடுத்துக் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்து கரையான் உள்ள இடத்தில் பூசுங்கள்.இவ்வாறு செய்து கரையான் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.
1)வேப்பிலை
கரையானை ஒழிக்க வேப்பிலையை பயன்படுத்தலாம்.ஒரு கைப்பிடி வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை கரையான் அரித்த இடத்தில் பூசி அதனை கட்டுப்படுத்துங்கள்.
1)போரிக் அமிலம்
கரையான் கூட்டம் காணப்படும் இடத்தில் போரிக் அமிலத்தை தூவி கட்டுப்படுத்தலாம்.போரிக் அமிலம் கரையானை ஒழிக்கும் மருந்தாக பயன்படுகிறது.
1)உப்பு
கரையான் உள்ள இடத்தில் தூள் உப்பை தூவினால் அனைத்தும் மடிந்துவிடும்.உப்பை தண்ணீரில் கலந்து ஸ்ப்ரேயராகவும் பயன்படுத்தலாம்.அதேபோல் கிராம்பை பொடித்து கரையான் மீது தூவினால் அனைத்தும் மடிந்துவிடும்.