ஒரே நெஞ்செரிச்சலாக இருக்கின்றாதா? அதை சரியாக்க இந்த கஷாயம் மட்டும் போதும்! 

Photo of author

By Sakthi

ஒரே நெஞ்செரிச்சலாக இருக்கின்றாதா? அதை சரியாக்க இந்த கஷாயம் மட்டும் போதும்!
நம்மில் ஒரு சிலருக்கு சில சமயங்களில் நெஞ்சு அதாவது மார்பு எரிச்சலாக இருக்கும். அதற்கு காரணம் அஜீரணம் தான். சில சமயங்களில் அஜீரணக் கோளாறு காரணமாக நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.
அல்லது காரணம் அதிகமாக சாப்பிட்டாலும் சிறிது நேரம் கழிந்து நெஞ்சு எரியத் தொடங்கும். இந்த நெஞ்சு எரிச்சலை குணப்படுத்த பல வகையான மருந்துகள் இருக்கின்றது. இருப்பினும் இயற்கையான வழிமுறையில் நாம் இதற்கு தீர்வு காணலாம். அந்த வகையில் நெஞ்சு எரிச்சலை குணமாக்க உதவும் கஷாயம் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன, எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* சுக்கு
* சோம்பு
* பனைவெல்லம்
* கொத்தமல்லி
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். தண்ணீர் லேசாக சூடாகும் பொழுது சோம்பு, கொத்தமல்லி, சுக்கு, பனைவெல்லம் இவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு இந்த கஷாயத்தை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த கஷாயம் ஆறினால் சுவையாக இருக்காது. எனவே இளஞ்சூடாக இருக்கும் பொழுது கஷாயத்தை குடிக்கலாம். இதை செய்தால் மார்பு எரிச்சல் உடனடியாக குணமாகும்.