உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக  தொடர்பு கொள்ளுங்கள்!

0
229
Have you cheated your money in an innovative way? Contact this number immediately!
Have you cheated your money in an innovative way? Contact this number immediately!
உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக  தொடர்பு கொள்ளுங்கள்!
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  குற்றங்களிலிருந்து பொதுமக்கள்  எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி இந்தியன் வங்கியில் பொதுமக்களுக்கு  மாவட்ட சைபர் கிரைம் சார்பு  ஆய்வாளர்  P.அழகுபாண்டி அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், வங்கிக் கணக்குகளின் இரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும், முகாந்திரம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி,மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று கூறினார்.
மேலும் ஆன்லைன் வர்த்தக தளத்தில் பொருட்களை வாங்கும் போது கவனமுடன் பொருட்களை வாங்க வேண்டும் என்றும், பரிசுப் பொருள்கள் விழுந்துள்ளதாக வரும் எந்த ஒரு அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள், லிங்க்குகளுக்கு பதில் வைக்க வேண்டாம் என்றும், கடன் தருவதாக கூறும் செயலிகளை பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டும் என்றும், தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டபொதுமக்களுக்கு  அவசர காலங்களில் தொடர்பு கொள்ளக்கூடிய காவல் செயலி பயன்கள் பற்றியும், பண மோசடி சம்பந்தமான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண் 1930, மோசடி புகார்களுக்கு புகார் செய்ய வேண்டிய இணையதள முகவரி (http://cybercrime.gov.in) வழங்கியும், பெருகி வரும் சைபர்கிரைம் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு வழங்கினர்.
Previous articleஇந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா! ஊரடங்கு போடப்படும் நிலையா?
Next articleரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முக்கிய தகவல்! இதற்கு இன்றே முன் பதிவு செய்து கொள்ளுங்கள்!