வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவரா? காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு! 

0
192
Have you come to Tamil Nadu from a foreign state? Action order put by the police!
Have you come to Tamil Nadu from a foreign state? Action order put by the police!

வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவரா? காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!

தற்பொழுது வடமாநிலத்தவர் பலர் வேலை நிமித்தம் காரணமாகவும் படிப்பதற்காகவும் தமிழகத்தை நாடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் ஒரு சிலர் மர்மமான முறையில் இறந்து விடுகின்றனர். அவர்களின் ஊர் பெயர் எதுவும் தெரியாமல் போலீசார் அதனை தேடும் வகையில் பெறும் அவதிக்குள்ளாகிறார்கள்.

அதுமட்டுமின்றி தற்பொழுது கோவை மாவட்டத்தில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.ஏனென்றால் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தமிழகத்திற்கு வந்து தங்கி மக்கள் இருக்கும் பகுதிகளை கண்காணித்து, அசம்பாவிதம் ஏற்படுத்த திட்டம் தீட்டி வருகின்றனர். எனவே இதனை எல்லாம் தடுக்கும் வகையில் தற்பொழுது தமிழக காவல்துறை புதிய உத்தரவை அமல் படுத்தி உள்ளது.

அதில், எந்த மாநிலத்தில் இருந்து வந்த நபராக இருந்தாலும் சரி அவர்களின் ஆதார் தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.அந்த வகையில் அவர்கள் வேலைக்காக வந்தவர்களாக இருந்தாலும் சரி , படிப்பதற்காக வந்த மாணவர்களாக இருந்தாலும் சரி, இங்கு வந்து தங்கி வீடு வாடகைக்கு எடுக்கும் அனைவரும் அவர்களது முழு விவரங்கள் கொண்ட ஆதார் எண்ணை காவல் துறையினர் சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.எனவே இனி வரும் நாட்களில் இதர மாநிலத்தில் இருந்து வரும் நபர்களின் ஆதார் எண் சேமிக்கப்படும்.

Previous articleதிருவையாறு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி! 6 பேர் படுகாயம்!
Next articleசபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! பம்பையில் இருமுடி கட்ட கட்டணம் விவரம் வெளியீடு!