10வது படிச்சிருக்கீங்களா? குட் நியூஸ்.. உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு வந்தாச்சு!!

0
5

நமது அண்டை மாநிலமான புதுவையில் அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள Village Assistant,Multi Tasking Staff உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

வேலை வகை: புதுவை அரசு வேலை

நிறுவனம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை(புதுவை)

பணி:

1)Village Assistant

2)Multi Tasking Staff

காலிப்பணியிடங்கள்:

இந்த இரு பணிகளுக்கென்று மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Village Assistant

காலிப்பணியிடம்: 63

கல்வித் தகுதி:

Village Assistant பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Multi Tasking Staff

காலிப்பணியிடம்: 09

கல்வித் தகுதி:

Multi Tasking Staff பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஊதிய விவரம்:

இந்த பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இவ்விரு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை:

**எழுத்து தேர்வு

**சான்றிதழ் சரிபார்ப்பு முறை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் http://recruitment.py.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: Village Assistant,Multi Tasking Staff பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய ஜூன் 16 இறுதி நாள் ஆகும்.

Previous articleஉங்களுக்கு பைல்ஸ் இருக்கா? எச்சரிக்கை.. இந்த உணவுகள் எமனாக மாறலாம்!!
Next articleஉங்களுக்கு அடிக்கடி தோள்பட்டை வலிக்குதா? அப்போ இந்த கேன்சர் அறிகுறியாக இருக்கலாம்!!