நீங்கள் மும்பைக்கு குடியேறி விட்டீர்களா? நிருபர் கேள்வி… கேள்விக்கு பட்டென்று பதில் அளித்த நடிகர் சூரியா… 

Photo of author

By Sakthi

 

நீங்கள் மும்பைக்கு குடியேறி விட்டீர்களா? நிருபர் கேள்வி… கேள்விக்கு பட்டென்று பதில் அளித்த நடிகர் சூரியா…

 

சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூரியா அவர்களிடம் நிருபர் ஒருவர் “நீங்கள் மும்பைக்கு குடியேறி விட்டீர்களா? என்று கேட்ட கேள்விக்கு நடிகர் சூரியா அவர்கள் பதில் அளித்துள்ளார்.

 

நடிகர் சூரியா தற்பொழுது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

 

இந்நிலையில் நடிகர் சூரியா அவர்கள் சமீபத்தில் அவருடைய ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது நடிகர் சூரியா அவர்கள் அடுத்தடுத்து நடிக்கவுள்ள திரைப்படங்கள் பற்றிய தகவல்களை அவரே கூறினார். தொடர்ந்து பேசிய நடிகர் சூரியாவிடம் நிருபர் ஒருவர் “நீங்கள் மும்பைக்கு குடியேறிவிட்டீர்களா? என்று கேள்வி கேட்டார்.

 

அந்த கேள்விக்கு நடிகர் சூரியா அவர்கள் “நான் மும்பையில் நிரந்தரமாக குடியேறவில்லை. எனது மகன் தேவ், மகள் தியா இருவரும் மும்பையில் படித்து வருகின்றனர். அவர்கள் இருவரையும் சந்திக்கவே நான் அடிக்கடி மும்பை சென்று வருகின்றேன். நான் சென்னையில் தான் வசித்து வருகிறேன்” கூறினார். இதன் மூலம் மும்பைக்கு நடிகர் சூரியா நிரந்தரமாக குடியேறிவிட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.