78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை!

0
38

78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை!

77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.மேலும் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள்,பிரதிநிதிகள் என்று 3000 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று உள்ளனர்.இதனையொட்டி செங்கோட்டையைச் சுற்றி 10000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.

கொடி ஏற்றத்திற்கு பின் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.உரையில் நாட்டின் வளர்ச்சி,பாஜகவின் சாதனைகள்,மணிப்பூர் வன்முறை கலவரம் உள்ளிட்ட பல்வறு முக்கிய நிகழ்வுகளை பற்றி பேசினார் .இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் ஆவார்கள் என்று கூறிய பிரதமர் இந்தியா தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய பிரதமர் மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும்.அதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார். மேலும் பல்வேறு நாடுகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திவால் ஆகிவிட்டது.ஆனால் இந்தியாவில் பணவீக்கம் ஏற்பட்ட பொழுது மக்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கவில்லை.காரணம் அவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது தான் என்றார்.மேலும் உலகின் மிகப்பெரிய 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் மாறும் என்று வாக்குறுதி அளித்தார்.மேலும் வருகின்ற 2047 ஆம் ஆண்டு வளர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இணைவதற்காக தற்பொழுது பாஜக அரசு ஓய்வின்றி உழைத்து வருகின்றது என்றார்.இதனை தொடர்ந்து வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாட்டு மக்களின் பேராதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்.மேலும் அடுத்த வருடம் செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்று மூவர்ண கொடியை ஏற்றுவேன் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.