நீங்கள் இதுவரை ஆதார் கார்டை அப்டேட் செய்யவில்லையா? லாஸ்ட் சான்ஸ்.. இந்த தேதிக்குள் வேலையை முடுச்சிடுங்க!!
இந்திய குடிமகன்களின் முக்கிய அடையாள ஆவணமாக இருப்பது ஆதார்.இந்த ஆதார் அட்டை வங்கி கணக்கு தொடங்க,அரசின் நல திட்டங்கள் பெற தேவைப்படும் மிக முக்கிய ஆவணமாகும்.இந்நிலையில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் விவரங்களை இலாவகமாக அப்டேட் செய்து கொள்ள கடந்த ஜூன் 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால் பெரும்பாலான மக்கள் ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதன் பேரில் அடுத்த மாதம் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை ஆதார் விவரங்களை திருத்தலாம் என்று ஆதார் ஆணையம் தெரிவித்திருக்கின்றது.
ஆதார் தொடர்பான மோசடி குற்றங்களை தடுக்க சமீபத்திய விவரங்களை ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டுமென்று UIDAI அறிவுறுத்தியிருக்கிறது.அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக தங்களது ஆதார் கார்டை புதுப்பிக்காதவர்கள் ஆன்லைன் மூலம் கட்டணமின்றி எளிதில் புதுப்பித்துக் கொள்ளலாம்.ஆதாரில் விலாசம்,தொலைபேசி எண்,புகைப்படம்,பிறந்த தேதி உள்ளிட்டவைகளை myAadhaar பக்கத்தில் கட்டணமின்றி புதுப்பித்துக் கொள்ள முடியும்.
ஆதார் விவரங்களை புதுப்பிப்பது எப்படி?
முதலில் https://ssup.uidai.gov.in/ssup/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.பின்னர் உள்நுழைவு பொத்தானைக் கிளிக் செய்து தங்களின் ஆதார் நம்பரை உள்ளிடவும்.
பிறகு கொடுக்கப்படும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு செய்யவும்.அதன் பின்னர் “OTP” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
அடுத்து ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வருகின்ற OTP எண்ணை உள்ளீடு செய்யவும்.அடுத்து கொடுக்கப்பட்டிருக்கும் “ஆன்லைனில் ஆதார் புதுப்பிக்கவும்” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து தங்கள் விவரங்களை புதுப்பிக்கவும்.இவ்வாறு செய்த 10 நாட்களில் தங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டு உரிய முகவரிக்கு அனுப்பிவைக்கபடும்.