திருமணம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளீர்களா? உஷார்! மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்கள்!

0
143
Have you registered online to get married? Usher! Nigerians involved in fraud!
Have you registered online to get married? Usher! Nigerians involved in fraud!

திருமணம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளீர்களா? உஷார்! மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்கள்!

திருமண மோசடி செய்து ஏமாற்றுவது தற்போதெல்லாம் ஒரு பேஷனாகிவிட்டது. அப்படி சில குற்றங்கள் நடந்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. திருமண மோசடி செய்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், புது டெல்லியில் வசித்தனர். அவர்கள் நைஜீரியர்கள். ஆப்ரிக்க நாட்டை சேர்ந்தவர்களை தெலுங்கானா சைபர் கிரைம் போலீசார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் செர்ஜ் ஒலிவியர் (33), ஓவோலாபி அபியோடன் ஒமோரிலேவா (31) மற்றும் ஒசாஸ் ப்ரீடோ (39). இவர்கள் அனைவரும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் புதுடெல்லி பகுதியில் திலீப் விஹார், நிலோதி பகுதியில் வசித்து வந்தனர். இன்னும் கனோன் எவர்ட் மற்றும் கான்டே மேரி  ஆகிய இரண்டு நபர்கள் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். சுற்றுலா விசாவில் இந்தியா வந்த இவர்கள் டெல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் மணப்பெண் மற்றும் மணமகன் தேடுபவர்களைத்தான்  இவர்கள் குறியாக செயல்படுகின்றனர். இவர்கள் போலி பெயர்கள் மற்றும் போலி சுய விவரங்களுடன் இவர்கள் அவர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். இந்த மோசடி திருமண விவரங்களில் அழகான ஆண்களின் புகைப்படங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் வெளிநாடுகளில் இருப்பதாகவும், அதிகமாக சம்பாதிப்பதாகவும் பொய் தகவல்களையும் வெளியிட்டு உள்ளனர். அவர்களை போலீஸ் மோப்பம் பிடித்து, அவர்களிடம் அவர்கள் போலி முகவரியில் நீண்டநாள் பேசி அதன் பின்தான் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் இவர்கள் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் 26 லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த புகாரின் பேரில் தான் தெலுங்கானா சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை புது டெல்லி சென்று கைது செய்துள்ளனர். அவர்களை ஐதராபாத்திற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்துள்ளனர். இதேபோல சென்னை திருமண தகவல் இணையதளம் மூலமும் நெதர்லாந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு பெண்ணிடம் பணமோசடி செய்த நைஜீரியா கும்பல் ஒன்று மீண்டும் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளது.

திருமண தகவல் இணையதளத்தின் மூலம் வரன் தேடுவோர்கள் எல்லாம் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில், ஆள்மாறாட்டம், மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் இந்த விதங்களில் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் டெல்லியிலிருந்து மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சென்று உத்தம் நகரில் தங்கியிருந்த அந்த மோசடி கும்பலை பிடித்தனர். பாலினஸ் சிகேலுவோ (வயது 31) மற்றும் சிலிட்டஸ் இகேசுக்வு (வயது 23) என்ற மூன்று நைஜீரியர்களை கைது ஆகஸ்ட் 31 ம் தேதி கைது செய்துள்ளனர்.

அதன் பிறகு அவர்களை விசாரணை செய்து, அவர்கள் மோசடி செயல்களுக்கு பயன்படுத்திய கைபேசி, லேப்டாப், வங்கி கணக்கு பாஸ்புக் மற்றும் 4,30,000 பணம் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர். பின்பு அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கைது செய்து உள்ளனர்.

Previous articleஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை!
Next articleராஜா கதைகளில் கேள்விப்பட்டு இருப்போம்! டெல்லி போனால் நேரில் பார்க்கலாம்!