கருத்தரிப்பதில் பிரச்சனையா?இந்த உணவு முறையை பாலோ பண்ணுங்க.. அடுத்த மாதேமே கர்ப்பம் தான்!!

Photo of author

By Selvarani

கருத்தரிப்பதில் பிரச்சனையா?இந்த உணவு முறையை பாலோ பண்ணுங்க.. அடுத்த மாதேமே கர்ப்பம் தான்!!

கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் உடலை கவனித்துக் கொள்வதில் மிகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக எதையெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்ற விஷயத்தை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் நிறைய பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக பச்சை காய்கறிகள், கீரை வகைகளை நிறைய சாப்பிடுவதால் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகரித்து செல்களின் வளர்ச்சியை பாதுகாக்கும்.

நட்ஸ் வகைகள், அவகோடா,ஆலிவ் எண்ணெய் ஆகியவை நோய் அழற்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டவை .எனவே அவற்றை சாப்பிடுவதால் கரு நிற்பதற்கு ஏதுவாக இருக்கும்.

நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், பீன்ஸ் வகைகள், முழு தானிய உணவுகள், திணை உணவுகள் போன்றவற்றை சாப்பிடலாம்.

இலவங்கப்பட்டை கருவுறுதலுக்கு சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் இன்சுலினை எதிர்க்கவும் உதவுகிறது .சரியான முட்டை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது .பி. சி .ஓ. எஸ் நோயால் கண்டறியப்பட்ட பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கருவுறுதலுக்கு தயாராகும்போது ஹார்மோன் சமநிலைப்படுத்த பீட்டா கரோட்டின் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட் அவசியம். வைட்டமின் பி பெண்கள் அண்ட விடுப்பின் போது கர்ப்பபைக்கு உதவுகிறது .இவை கருவை ஆரோக்கியமாக வைப்பதோடு கருச்சிதைவை தவிர்க்கிறது.

போலிக் அமிலம் கருவுறுதலுக்கு திட்டமிடும்போது அவசியமானது. இது கருவுக்கு நரம்பு குறைபாடு நேராமல் தடுக்கிறது .வைட்டமின் சி நிறைந்த உணவு வகைகள் உடலில் புரோஜஸ்ட்ரான் அளவை சீராக்கி கருவுறுதல் குறைபாட்டையும் நீக்குகிறது.