இந்த வங்கியில் FD கணக்கு வைத்து இருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கு நல்ல லாபம் தான் !

0
297

தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி ஆனது தனது வங்கியில் ரூ. 2 கோடிக்கும் குறைவான அளவில் பிக்ஸட் டெபாசிட் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியினை வழங்கியுள்ளது. அதாவது வங்கி தற்போது ரூ. 2 கோடிக்கும் குறைவான பிக்ஸட் தொகைக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 24, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என்பது தெரிய வந்துள்ளது.

சாதாரண மக்களின் பிக்ஸட் டெபாசிட் கணக்குக்கு 3.00% முதல் 7.00% வரையிலான வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களின் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்ஸட் டெபாசிட் கணக்குக்கு 3.50% முதல் 7.75% வரையிலான வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. மக்கள் இந்த உயர்ந்த வட்டி விகிதத்தை பெற வேண்டுமென்றால் அவர்கள் 5 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்ய வேண்டும்.

7 முதல் 29 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3% வட்டி விகிதத்தையும், 30 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3.50%, 46 முதல் 6 மாதங்களுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 4.50%, 6 மாதங்களுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 5.75% வட்டி விகிதத்தையும் ஹெச்டிஎஃப்சி வங்கி வழங்குகிறது. 9 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 6.00% வட்டி விகிதம், 1 நாள் முதல் 1 வருடம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 6.60% வட்டி விகிதம் மற்றும் 15 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.00% வட்டியும் வழங்கப்படுகிறது. மேலும் மூத்த குடிமக்களின் 7 நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 50 பிபிஎஸ் கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

Previous articleஅரசு பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் குளறுபடி! மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!
Next articleமக்களே எச்சரிக்கை பண பரிவர்த்தனை முழுமையாக பாதிக்க வாய்ப்பு! வங்கிகள் தொடர் விடுமுறை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here