அவருக்கு மட்டும் பீல்டிங் செட் செய்ய முடியாது! இந்திய வீரர் குறித்து நவ்ஜோத் சித்து பேட்டி! 

Photo of author

By Sakthi

அவருக்கு மட்டும் பீல்டிங் செட் செய்ய முடியாது! இந்திய வீரர் குறித்து நவ்ஜோத் சித்து பேட்டி!
இந்திய அணியின் உள்ள முக்கியமான வீரர் ஒருவருக்கு பீல்டிங் செட் செய்ய யாராலும் முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சித்து அவர்கள் பாராட்டி பேசியுள்ளார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகின்றது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள உலகக் கோப்பை தொடரில் இன்றுடன்(ஜூன்18) லீக் சுற்றுகள் முடிந்து நாளை(ஜூன்19) முதல் சூப்பர் 8 சுற்றுக்கள் தொடங்குகின்றது.
சூப்பர் 8 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளது.
இந்தியா தன்னுடைய நான்கு லீக் சுற்றுகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் கடைசி லீக் சுற்றில் இந்திய அணி சேசிங் செய்யும் பொழுது தடுமாறியது. அப்பொழுது இந்திய அணியின் சூரியக்குமார் யாதவ் அவர்கள் பொறுப்பாக விளையாடி அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இந்நிலையில் சூரியக்குமார் யாதவ் அவர்களை பற்றி இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து அவர்கள் பாராட்டி பேசியுள்ளார்.
இது தொடர்பாக நவ்ஜோத் சித்து அவர்கள் “அமெரிக்கா அணிக்கு எதிராக சூரியக்குமார் யாதவ் அவர்கள் அடித்த ரன்களில் 40 சதவீத ரன்கள் ஃபைன் லெக் ஏரியாவில் இருந்து வந்தது. சூரியக்குமார் யாதவ் அவர்கள் மைதானத்தின் வி திசைக்கு எதிர்புறமாக பின்பக்கத்தில் அடிக்கிறார். சூரியக்குமார் யாதவ் அவர்கள் பந்தை 360 டிகிரியில் அடிக்கிறார். அதனால் அவருக்கு உங்களால் பீல்டிங் செட் பண்ண முடியாது.
அவ்வாறு நீங்கள் பீல்டிங் செட் செய்திருந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டு இருப்பீர்கள். அந்த போட்டியில் அவர் விளையாடிய வேகத்திற்கு 50 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் போட்டியை வென்று கொடுத்திருப்பார்.
ஒரு சில வீரர்களால் மட்டுமே அந்த வேகத்தில் விளையாட முடியும். ஹர்திக் பாண்டியா, ட்ராவியாஸ் ஹெட் ஆகியோர் அந்த வேகத்தில் விளையாடலாம். ஆனால் அவர்கள் புதிய பந்தில் அடிக்கக் கூடும் என்று அவர் கூறியுள்ளார்.