நிலத்தை விற்று தருவதாக என்னிடம் 25 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டார்!!! பிரபல நடிகை கௌதமி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!!

Photo of author

By Sakthi

நிலத்தை விற்று தருவதாக என்னிடம் 25 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டார்!!! பிரபல நடிகை கௌதமி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!!

Sakthi

Updated on:

நிலத்தை விற்று தருவதாக என்னிடம் 25 கோடி ரூபாயை ஏம்மாற்றி விட்டார்!!! பிரபல நடிகை கௌதமி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!!

பிரபல நடிகை கௌதமி அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்றுத் தருவதாக கூறி ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார்.

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் 1988ம் ஆண்டு வெளியான குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலமாக நடிகை கௌதமி அவர்கள் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, உலகம் பிறந்தது எனக்காக என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்பொழுது விஷால் நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கௌதமி தன்னை ஒருவர் 25 கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை கௌதமி அவர்கள் அளித்த புகார் மனுவில் “தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று ஐந்து மொழிகளிலும் சேர்த்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் உள்ள நிலம் ஒன்றை வாங்கி இருந்தேன். தற்பொழுது அந்த இடத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய் ஆகும். குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த இடத்தை விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.

46 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்து தருவதாக தனியார் கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் அவர்ஙள் என்னிடம் உறுதியாக கூறினார். அதனால் நான் அவரிடம் நிலத்தை விற்றுத் தருவதற்கு அதிகாரம் வழங்கினேன். ஆனால் அதை தவறாக பயன்படுத்தி அழகப்பன் அவர்கள் என்னுடைய 46 ஏக்கர் நிலத்தை அவரே வைத்துக் கொண்டார். இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது கொலை செய்துவிடுவேன் என்று எனக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார்.

எனவே அவர்மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள என்னுடைய 46 ஏக்கர் நிலத்தை அழகப்பன் அவர்களிடம் இருந்து மீட்டு எனக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த புகார் மனுவில் நடிகை கவுதமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.