முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக தலைமை அடித்த அந்தர் பல்டி!

0
200

பாரதிய ஜனதா கட்சிக்கு தனிக் கொள்கை இருந்தாலும் கூட அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருக்கின்றது என்று தமிழக பாரதிய ஜனதா முருகன் தெரிவித்திருக்கின்றார்.

அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை மிகப்பெரிய பூதாகரமாக உருவானது. அதன்பிறகு முதல்வர், மற்றும் துணை முதல்வர் தரப்பினரை அமைச்சர்கள் சந்தித்து பேசி, அவர்களை சமாதானம் செய்து கடைசியாக அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று உறுதியும் செய்யப்பட்டது. ஆனாலும் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுக கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் எதுவும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. கூட்டணி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும் என்று அந்தக் கட்சியின் தலைவர் முருகன் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தார். இவருக்கு அதிமுக தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்து வந்தார்கள்.

இந்தநிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். முதல்வர் வேட்பாளர் குறித்து எங்களுடைய கட்சித் தலைமைதான் அறிவிக்கும். அதே சமயத்தில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று எப்பொழுதும் தெரிவித்தது கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தற்போது இருந்து வருகின்றார் என்று தெரிவித்தார்.

அதோடு, பாரதிய ஜனதா கட்சிக்கு தனிக் கொள்கை இருந்தாலும்கூட ,அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருக்கின்றது. திமுகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தனித்தனி கொள்கை இருப்பது போலவே அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் தனித்தனி கொள்கைகள் இருக்கின்றன. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களில் இருக்கின்ற நன்மைகள் தொடர்பாக ,விவசாயிகளிடம் விளக்கி வருகின்றோம். இதன்மூலமாக திமுகவின் போலி பிரச்சாரம் ,மற்றும் அதனுடைய முகத்திரை கிழிக்கப்பட்டு வருகின்றது என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

Previous articleஎங்கள் கொள்கை தான் எங்களுக்கு முக்கியம்! முதல்வர் அதிரடி!
Next articleரஜினியை எச்சரிக்கை செய்த மக்கள் சேவை இயக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here