பிரபல நடிகையும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்து மறைந்த ஜெயலலிதா அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது என்ன செய்வார்கள் என்பதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக அரசியலில் தன்னுடைய ஆளுமையால் தமிழகத்தின் முதல்வராக சிறப்பாக செயல்பட்ட ஜெயலலிதா அவர்கள் 16 வயது இருக்கும் பொழுது வெண்ணிற ஆடை திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே குளியல் காட்சி மற்றும் ஸ்லீவ் லெஸ் உடை அணிந்து நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.
அதைத் தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் ஜெயலலிதா அவர்களை தேடி வர தன்னுடைய ஆசையான கல்லூரி படிப்பை முடிக்க முடியாமல் போனது. இருப்பினும் நடிகையாக ஜெயலலிதா அவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெயசங்கர் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார்.
இதில் எம்.ஜி.ஆர் அவர்களுடன் மட்டுமே 28 படங்களில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 120 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அரசியலில் ஆசை ஏற்பட நடிகையாக இருந்த ஜெயலலிதா அரசியல்வாதியாக மாறினார். இதையடுத்து ரசிகர் ஒருவர் நடிகை அரசியல்வாதியாக மாறியதற்கு காரணம் பணம் வரும் என்பதால் தானே என்று கடிதம் எழுதினார்.
அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா அவர்கள் அரசியலுக்கு சென்றால் பணம் வரும் என்பதால் என்று நான் செல்லவில்லை. அரசியல் மூலமாக மக்களுக்கு பணியாற்றலாம். அதனால் தான் அரசியலுக்கு சென்றேன். ஏன் எனக்கு நடிகர் ரஜினியுடன் பில்லா திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதும் அதை நிராகரித்து விட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயலலிதா அவர்கள் “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் நான் விசில் அடிக்கத் தொடங்கி விடுவேன். நான் விசில் அடிப்பதை இன்று வரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறிய அவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு ஒன்றை பகிர்ந்தார்.
அதாவது ஜெயலலிதா அவர்கள் அளித்த அந்த பேட்டியில் “நான் ஒரு முறை என்னுடைய தோழியுடன் இணைந்து மைசூர் பிருந்தாவனத்திற்கு சென்றேன். அப்பொழுது அங்கு இருந்த மலர்களும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும் என் மனதில் மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நான் விசிலடிக்கத் தொடங்கி விட்டேன். தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டே நீண்ட தூரம் நடந்தேன்.
நான் விசில் அடிக்கும் சத்தத்தை விட அதிகமாக ஒரு சத்தம் என் பின்னால் கேட்டது. என்ன என்று திரும்பி பார்த்தேன். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஒரு மாணவர் கூட்டம் என்னை கேலி செய்து கொண்டு என் பின்னால் வந்தது. இதை பார்த்து வெட்கத்துடன் என் தோழியை அழைத்துக் கொண்டு காருக்குள் சென்று. உட்கார்ந்து விட்டேன். இந்த நிகழ்வை இன்று நினைத்தாலும் வெட்கமாகத்தான் இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.