ஒரே வார்த்தையில இயக்குனர்களை தன் வசப்படுத்திய பிரபல நடிகை!!

Photo of author

By Parthipan K

தமிழ்சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராசி கண்ணா. இவருடைய  கொழு கொழு  கன்னத்தை ரசிக்கவே, இவருடைய படத்தை ரசிகர்கள் ஆவலோடு  பார்ப்பதுண்டு. 

இவர் தெலுங்கில் முன்னணி  நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் அவர் அடங்க மறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  சுந்தர் சி இயக்கும் அரண்மனை 3 படத்தில் நடிக்கிறார் ராஷி கன்னா. தமிழில் அருவா படத்திற்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு சம்பளம் குறைவா இருந்தா பரவாயில்ல கதைதான் முக்கியம். நல்ல கதையா இருந்தா என்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ள நான் தயார்.

ஆனா நல்ல கதைகள் கூட திரைக்கு வரும்போது நாம கேட்ட கதைக்கும் திரையில் பார்க்கிற கதைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும்.

ஒரு படம் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் நம் கையில் இல்லை. கதை விஷயத்தில் மட்டும் காம்பிரமைஸ் பண்ண மாட்டேன் ” என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட இயக்குனர் பட்டாளமே அவரது வீட்டைத் தேடி படையெடுத்துள்ளனர்.